|
இது தொடர்பில் அவர் கூறியதாவது:
மகிந்தவின் தனிப்பட்ட செலவுகளுக்காக ரூ 3.73 பில்லியனிலிருந்து ரூ 5.75 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கும் அப்பால் 1.4 பில்லியன் "இதர முதலீடுகள்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த கால அரச தலைவர்களின் கீழான வரவு செலவுத் திட்டத்தில் இத்தகைய ஒதுக்கீடு எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.
மிலிந்த மொறகொடவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோல்வியடையச் செய்வது என்பது அரசாங்கத்துக்கு பாரிய சவாலாக உள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கைவிடுதல், விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக மகிந்தவுக்கு எதிரான விசாரணை நடத்த நாடாளுமன்ற பொறுப்புக் குழு அமைத்தலைத் தவிர்த்தல், அரசாங்கத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கும் கோப் நிர்வாகத்தைக் கைவிடுதல் என்பதற்காகத்தான் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை பிற்போட்டு வருகின்றனர்.
எதிர்காலத்தில் எமது தேசிய காங்கிரஸ் கட்சி அரசாங்கம் அமைக்கும் போது டி.எம். ஜயரட்ண அல்லது மூத்த சுதந்திரக் கட்சி உறுப்பினர், பிரதிப் பிரதமராக இருப்பார் என்றார் மங்கள சமரவீர. |